Siddhars

 Here


சித்தர்‌ என்போர்‌ இப்பிறவியிலேயே சிவலோகத்தைக்‌ கண்டு களித்தவர்கள்‌ ஆவர்‌. தம்முடலிலேயே பரநாத ஒலியின்‌ முடிவையும்‌ கேட்டு அனுபவித்தவர்கள்‌ 


ஆவர்‌. என்றும்‌ நிலையாக வாழ்பவர்‌. குற்றமில்லாதவர்‌. நல்வினை தீவினையிலிருந்து நீங்கியவர்‌. மேலான முக்தியை அடைந்தவர்கள்‌. முப்பத்தாறு தத்துவங்களையும்‌ கடந்த பெருமையை உடையவர்கள்‌. 


மேலும்‌ சித்தர்கள்‌ என்றால்‌ சித்தி பெற்றவர்கள்‌,  வீட்டின்பம்‌ அடைந்தவர்கள் என்று பொருள்‌ கொள்ளலாம்‌.


சித்‌ என்றால்‌ அறிவு எனப்படும்‌ சித்தை உடையவர்கள்‌, “சித்தர்கள்‌ அறிவு படைத்தவர்கள்‌, அறிஞர்‌ நுண்ணறிவு படைத்தவர்கள், மெய்ஞ்ஞானிகள் என்றும்‌ கூறலாம்‌.


இறைவனைக்‌ காண முயல்பவனைப் பக்தர்‌ என்றும்‌, கண்டு தெளிந்தவரைச் ‌ சித்தர்‌ என்றும்‌ தேவாரம்‌ பாகுபடுத்திக்‌ காட்டுகிறது. 


மனம்‌, புத்தி, சித்தம்‌. அகங்காரம்‌ என்பவற்றுள்‌ சித்தம்‌ எனப்படுவது எண்ணியதைத்‌ திண்ணமாக முடிப்பது. இறைவனை அடைந்தே தீருவது என்பது வைராக்கியம்‌. 

சித்தமாம்‌ வைராக்கியத்தில்‌ சித்து எனப்படும்‌ உணர்வுடன்‌ கூடி இறையனுபவத்தில்‌ திளைப்பவர்களே சித்தர்கள்‌ எனலாம்‌.


சித்தர்கள்‌ மதவாதிகளோ, வைதீகர்களோ, கயநலம்‌ கொண்டவர்களோ அல்லர்‌; மனிதாபிமானிகள்‌; பகுத்தறிவுவாதிகள்‌, தமக்கென வாழாப்‌ பிறர்க்குரியாளர்கள்‌ ஆவர்‌. 

உலக உயிர்களின்‌ இம்மை, மறுமை வாழ்வு நன்முறையில்‌ அமைய வேண்டும்‌ என்பதைத்‌ தமக்குரிய கடமையாகக்‌ கொண்டு வாழ்ந்த பெருமக்கள்‌ இவர்களை அறிவர்‌ என்ற சொல்லால்‌ நம்‌ இலக்கியங்கள்‌ போற்றுகின்றன.




இவர்கள்‌ காமம்‌, வெகுளி, மயக்கம்‌ ஏதுமில்லாத ஒழுக்கத்தினை உடையவராய்‌ இறப்பு, நிகழ்‌, எதிர்வு என்ற மூன்று வகைக்‌ காலத்திலும்‌ நிகழும்‌ நிகழ்ச்சிகளை முழுதும்‌ உணர்பவர்கள்‌.



வாசி என்ற மூச்சினை அடக்கியாண்டு யோக சக்தியால்‌ உடலிலுள்ள மூலாதாரம்‌, கொப்பூழ்‌. இரைப்பை, நடு இதயம்‌, கழுத்து, தலை உச்சி என்ற ஆறு இடங்களிலும்‌ மனதை முறையாக நாட்டிக்‌ குண்டலினி சக்தியை எழுப்பி பலவிதமான அனுபவமும்‌, வெற்றியும்‌ கண்டு அப்பால்‌ உள்ள எல்லா மன பொருளில்‌ மனதை நிலைத்துச்‌ சித்தி பெறுபவரே சித்தர்‌ என நூல்கள்‌ கூறுகின்றன.



Will continue....


சித்திகள்

சித்திகள்‌ பல வகையுண்டு.

அவையாவன :

இட்டசித்தி, வாதசித்தி, யோகசித்தி, ஞானசித்தி,மந்திரசித்தி, அணிமாசித்தி முதலியன. வைத்தியச்‌ சித்திகளைப்‌ பெற்ற சித்தர்கள்‌ மற்ற துறைகளிலும்‌ கை வரப்‌ பெற்றவர்களாக விளங்கினர்‌.


சித்தத்தை சிவன்பால்‌ வைத்து சிந்தனையில்‌ மூழ்க மூழ்க சித்த விகாரம்‌ ஒடுங்கும்‌. அஃது. ஒடுங்க ஒடுங்க ஆத்ம சக்தி எனும்‌ ஆத்மஞானம்‌ அடைவதே இவர்கள்‌ குறிக்கோளாகும்‌. எவ்வகையால்‌ உடல்‌ வளர்ந்து அழிகின்றது எனக்‌ கண்டு தெளிந்தவர்கள்‌. அழியக் கூடிய இவ்வுடம்பைக்‌ கொண்டே ஞான சக்தியால்‌ மோஷ சாதன வழியைக்‌ கண்டவர்கள்‌. மேலும்‌ குண்டலினி சக்தியை எழுப்பி மணி, மந்திர, மருந்துகளினால்‌ மாறாத மதியமிர்தம்‌ உண்டு, நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காடு இவைகளால்‌ கேடு நேராத நித்திய உடம்பைப்‌ பெற்றவர்கள்‌ சித்தர்கள்‌, என்றும்‌ சாகாதவரே சித்தராவார்‌.


சித்தர்கள்‌ மரணமில்லாப்‌ பெருவாழ்வைப்‌ பெற்றவர்கள்‌, என்றும்‌ அழியாத உடம்பைப்‌ பெற்றவர்கள்‌, உடம்பு அழியாமல்‌ பாதுகாக்கும்‌ முறையை அறிந்தவர்கள்‌. தம்‌ உடம்பை வைத்து விட்டு உயிரற்ற மற்றொரு உடம்பிலே புகுந்து நடமாடும்‌ சக்தி படைத்தவர்கள்‌. வானமார்க்கமாக நினைத்த இடத்திற்குச் செல்லும்‌ ஆற்றல்‌ உள்ளவர்கள்‌. மூன்று காலங்களையும்‌ அறிந்தவர்கள்‌. உலகம்‌ முழுவதிலும்‌ உள்ள விஷயங்களை இருந்த இடத்திலிருந்தே அறியும்‌ ஆற்றல்‌ பெற்றவர்கள்‌. சித்தர்களின்‌ பேராற்றலை குறுந்தொகை என்னும்‌ சங்க இலக்கியம்‌ சிறப்புடன்‌ பேசுகின்றது.



நிலம்‌ தொட்டுப்‌ புகார்‌ வானம்‌ ஏறார்‌ விளங்கிரு

முன்னீர்‌ காலிற்‌ கொள்ளார்‌

   

- குறுந்தொகை

புத்த சமய நூலான மணிமேகலை என்னும்‌ செந்தமிழ்க்‌ காப்பியம்‌

நிலத்திற்குளித்து நெடுவீகம்‌ பேறிச்‌ சலத்திற்‌ திரியுமோர்‌ சாரணன்‌

என்று சித்தி பெற்றோரைச் சிறப்புடன்‌ கூறுகின்றது.

பிற்கால நூலான குறவஞ்சியில்‌ திரிகூடராசப்பக்‌ கவிராயர்‌ கவன சித்தர்‌ வந்து வந்து காயசித்தி விளைப்பார்‌ என்று சித்தால்‌ பெறும்‌ சிறப்பினைக்‌ கூறியுள்ளார்‌. சுருங்கக்‌கூறின்‌ சித்தர்கள்‌ எல்லாம்‌ செய்ய வல்லவர்கள்‌, அவர்களால்‌ எதையும்‌ செய்ய முடியும்‌ என்று பாம்பாட்டி சித்தர்‌ கூறுகின்றார்‌.



ஆதிசேடன்‌ ஆகிலுமே அங்கையினாலே

ஆட்டி விடுவோம்‌ எங்கள்‌ ஆக்கினைக்குள்ளே

நீதியோடு அடங்கியே நின்றிடச்‌ செய்வோம்‌

நின்ற நிலை தவறாமல்‌ ஆடு பாம்பே

   


செப்பரிய மூன்றுலகம்‌ செம்பொன்‌ ஆக்குவோம்‌

செங்கதிரைத்‌ தண்கதிராய்ச்‌ செய்து விடுவோம்‌

இப்பெரிய உலகத்தை இல்லாமல்‌ செய்வோம்‌

எங்கள்‌ வல்லபம்‌ கண்டு ஆடு பாம்பே

   


எட்டு மலைகளைப்‌ பந்தாயெடுத்‌ தெறிகுவோம்‌

ஏழு கடலையும்‌ குடித்‌ தேப்பமிடுவோம்‌

வானத்தையும்‌ வில்லாய்‌ வளைத்திடுவோம்‌

மூண்டெறியும்‌ அக்கினிக்குள்‌ மூழ்கி வருவோம்‌

   

என்‌ற பாடல்‌ வரிகளால்‌ அறியலாம்‌.


சித்தர்கள்‌ சிவநெறியைப்‌ பூண்டு ஒழுகியவர்கள்‌. சித்த சமயத்தைச்‌ சார்ந்தவர்கள்‌.உடம்பைப் பொய்‌ என்ற வாதத்தை மறுத்து மாறாக உடம்பை மெய்‌ என்று கூறியவர்கள்‌ தமிழ்‌ மருத்துவமாம்‌ சித்த மருத்துவத்திற்கும்‌ இவர்களே காரணமாவார்கள்‌. இவர்கள்‌ வல்லமைக்கு மேலும்‌ ஒரு சான்று :


   

Comments

Popular posts from this blog

soma enigma

Unsolved mysteries